என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
மதுபழக்கத்தை தட்டிக்கேட்ட 24 வயது மனைவி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை; கணவன் வெறிச்செயல்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பள்ளி, காசப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சிவயோகி (வயது 28). இவரின் மனைவி சுதா (வயது 24). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்களுக்கு இரண்டு வயதுடைய குழந்தை இருக்கிறது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிவயோகி, சரிவர வேலைக்கு செல்லாமல் மதுபானம் அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த பழக்கத்தை கைவிடும்படி சுதா தனது கணவரை கண்டித்தும் வந்துள்ளார். நேற்று முன்தினம் சிவயோகி மதுபானம் அருந்திவிட்டு வந்த சமயத்தில், கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சிவயோகி தனது வீட்டில் இருந்த துப்பட்டாவை எடுத்து, மனைவியின் கழுத்தில் இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சுதா மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிவயோகியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.