சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்; கண்ணீரில் தொண்டர்கள்..! அதிர்ச்சியில் முன்னாள் முதல்வர்.!

சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்; கண்ணீரில் தொண்டர்கள்..! அதிர்ச்சியில் முன்னாள் முதல்வர்.!


karnataka-jd-s-party-candidate-died

 

ஜேடி (எஸ்) வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மாரடைப்பால் காலமானார்.

2023 கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில அரசு, தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. 

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சியினர் தீவிர களப்பணிகளை தொடங்கியுள்ளனர். அம்மாநிலத்தில் ஜேடி (எஸ்) கட்சியின் சிந்தாகி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சிவானந்த பாட்டில். 

இவர் நேற்று இரவில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவு அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமி தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.