மாற்று சாதி இளைஞரை காதலித்த 20 வயது மகள் கொலை; காதலன் தற்கொலை..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கீர்த்தி. இவர் மாற்று சமூகத்தைச் சார்ந்த கங்காதர் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகளின் காதல் குறித்து தகவலறிந்த கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தனது மகளை கொலை செய்துள்ளார்.
காதலி மாண்டுபோன தகவலை அறிந்த அவரது காதலர் கங்காதர் தற்கொலை செய்துகொண்டு தனது உயிரை மாய்த்தார்.
இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொலை செய்த தந்தை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.