இந்தியா

58 வயது தாயை பலாத்காரம் செய்த கொடூர மகன்.. பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

58 வயது தாயை பலாத்காரம் செய்த கொடூர மகன்.. பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!

தன்னை பெற்றெடுத்த தாயை மகனே பாலியல் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் கர்நாடகாவை அதிரவைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னடா, புத்தூர் தாலுகா கேடம்பாடி கிராமத்தை சார்ந்த 58 வயது பெண்மணி, தனது மகனுடன் வசித்து வருகிறார். 58 வயது பெண்ணின் மகனுக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். 

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கணவரை பிரிந்த பெண்மணி அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால் வீட்டில் தாயும் - மகனும் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது 58 வயது தாயாரின் அறைக்கு சென்ற மகன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட தாய் கூச்சலிடவே, அவரது வாயில் துணியை வைத்து பொத்தி பாலியல் பலாத்கார குற்றம் நடந்துள்ளது. 

மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்திடுவேன் என சொந்த தாயை சீரழித்து மகன் மிரட்டி சென்ற நிலையில், மறுநாள் காலையில் எழுந்ததும் மீண்டும் மகன் தாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் 2 நாட்களாக மனரீதியாக பாதிக்கப்பட்ட தாய், அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று நேற்று புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் மகனை கைது செய்த நிலையில், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement