பள்ளியின் முதல்வர், ஆசிரியர் தினமும் தொல்லை.. இரயில் முன்பாய்ந்து உயிரை மாய்த்த சிறுமி.!Karnataka Bangalore Yeshvanthpur Minor Girl Suicide In front of Train Torture of School Teacher

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், யஷ்வந்த்புரம் பகுதியில் வசித்து வரும் தம்பதியின் மகள் ரம்யா மூர்த்தி (வயது 15). ரம்யா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் சிறுமி தனது பள்ளிக்கு நொறுக்குத்தீனிகளை எடுத்து சென்ற நிலையில், அதனை வகுப்பறையில் வைத்து சாப்பிட்டுள்ளார். 

இந்த விஷயம் ஆசிரியருக்கு தெரியவந்ததால், ஆசிரியர் ரம்யாவை கண்டித்து இருக்கிறார். மேலும், பள்ளியின் முதல்வருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, பள்ளியின் முதல்வர் ரம்யாவின் தாயை நேரில் அழைத்து எச்சரித்து இருக்கிறார். இதுதொடர்பாக பள்ளிக்கு எதிராக ரம்யாவின் தாயார் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். 

karnataka

இதனால் ஆத்திரமடைந்த பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் ரம்யாவுக்கு தொல்லை கொடுத்து வந்த நிலையில், நேற்று நடைப்பயிற்சிக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி ரம்யா, யஷ்வந்தபுரம் இரயில் நிலையம் அருகே அவ்வழியாக வந்த இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த யஷ்வந்த்புரம் இரயில்வே காவல் துறையினர், ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரம்யாவின் தற்கொலை கடிதத்தில், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் தொல்லையால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.