வீடெல்லாம் இரத்த வெள்ளம்.. நடத்தை சந்தேகத்தில் மனைவி, மாமியார் வெட்டிப்படுகொலை..!karnataka-bangalore-wife-and-mother-in-law-murder-polic

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், வீட்டிற்கு வந்த மனைவியின் தாயையும் படுகொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 48). பெங்களூர் கோவிந்தராஜ் நகர், எஸ்.ஆர் காலனியை சேர்ந்தவர் சுனிதா (வயது 38). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 18 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தம்பதிக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு கோவிந்தராஜ் நகர் மூடலபாலையா, சஞ்சீவினி நகரில் வசித்து வருகிறார்கள். 

ரவிக்குமார் சொந்தமாக பேக்கரி நடத்தி வரும் நிலையில், கடந்த சில மாதமாகவே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நேரத்தில் சுனிதாவின் தாய் சரோஜாம்மா (வயது 65) தனது மகளை பார்க்க வந்துள்ளார். 

karnataka

அப்போது, ரவிக்குமாருக்கும் - சுனிதாவிற்கும் இடையே குடும்ப தகராறு நடந்து வந்த நிலையில், சுனிதாவின் நடத்தை தொடர்பாக ரவிக்குமார் வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். ஆத்திரமடைந்த ரவிக்குமார் அரிவாளை எடுத்து சுனிதாவை சரமாரியாக வெட்ட, மகளை காப்பாற்ற சரோஜாம்மா முயற்சித்துள்ளார். அவரை கீழே தள்ளவிட்ட ரவிக்குமார், சரோஜாம்மாவையும் சரமாரியாக வெட்டி இருக்கிறார். 

இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தாய் - மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொலையை செய்த ரவிக்குமார் கோவிந்தராஜ் நகர் காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரணடைந்தார். ரவிக்குமாரை கைது செய்த காவல் துறையினர், சுனிதா மற்றும் சரோஜாம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.