ஆசனவாயில் காற்று செலுத்தியதால் இளைஞர் பலி; விளையாட்டு வினையான பயங்கரம்.!Karnataka Bangalore Man Died after Air Compressor Compressed on Anal

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 28). இவர் கடந்த மார்ச் 26ம் தேதி, தனது இருசக்கர வாகனத்தை சர்விஸ் செய்ய கடைக்கு சென்றுள்ளார். 

இவரின் நண்பர் முரளி மெக்கானிக்காக பணியாற்றி வரும் நிலையில், அவரின் கடைக்கு சென்றுள்ளார். அங்கு ஏர் கம்ப்ரஸர் காற்றை உபயோகம் செய்துகொண்டு இருந்தனர். 

அச்சமயம் யோகேஷின் ஆசனவாயில் முரளி விளையாட்டுத்தமாக கம்ப்ரஸர் காற்றை செலுத்தி இருக்கிறார். இதனால் வயிற்றுக்குள் காற்று சென்று யோகேஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், முரளியை கைது செய்தனர்.