இந்தியா

காதலிக்கும் போது வாழைப்பழம் மாதிரி பேசி, இப்படி பண்ணிட்டானே.. இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

காதலிக்கும் போது வாழைப்பழம் மாதிரி பேசி, இப்படி பண்ணிட்டானே.. இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

காதலிப்பதாக நெருங்கி பழகி பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்யாமல் மிரட்டல் விடுத்ததாக வாலிபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகலக்குண்டே காவல் எல்லைக்குட்பட்ட தாசரஹள்ளி பகுதியை சார்ந்தவர் அருண். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் இடையே 10 மாதங்களுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்பாக பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக அருண் இளம்பெண்ணிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இதனால் இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்த நிலையில், இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். 

காதல் மொழிகள் பேசி உல்லாசத்தை வாடிக்கையாக ஆக்கிய நிலையில், ரூ.4 இலட்சம் வரை பெண்ணிடம் அருண் வாங்கியுள்ளார். தற்போது பெண்மணி கர்ப்பமான நிலையில், அதனை காதலி அருணிடம் தெரியப்படுத்தி இருக்கிறார். மேலும், திருமணம் செய்யவும் வேண்டுகோள் வைத்துள்ளார். 

இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த அருண், இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி அருணின் மீது பகலக்குண்டே காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் அருணின் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Advertisement