அவ என்கூட அதை செய்ய மறுக்கிறாள்.. திருமணமாகும் முன்பே., மனதுடைந்து தற்கொலை செய்த இளைஞர்.!



Karnataka Bangalore Hosapete Man Suicide

நிச்சயம் செய்த பெண் சரிவர வீடியோ கால் பேசாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஒசக்கோட்டை நந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் தவுசீப் பாஷா (வயது 27). இவர் ஊர்க்காவல் படையில் அதிகாரியாக இருந்து வருகிறார். இவருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். 

இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்த நிலையில், வருங்கால மனைவியோடு தினமும் இரவில் வீடியோ கால் பேசி வந்துள்ளார். நேற்று முன்தினமும் இருவரும் வீடியோ கால் பேசியுள்ளனர். 

karnataka

அப்போது, பெண் தவுசீப்பின் கேள்விகளுக்கு சரிவர பதில் அளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, மனவேதனையடைந்த தவுசீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஒசக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.