தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
உயிரிழந்த சிறுவனை உப்புக்குவியலுக்குள் கொட்டிவைத்த சோகம்.. மூடநம்பிக்கையால் உயிர்த்தெழுவான் என நடந்த பரிதாபம்.!
வாட்சப் செய்தியை உண்மை என நம்பிய இறந்த சிறுவனை உப்பு குவியலால் மூடி உயிர்த்தெழுவான் என நம்பியிருந்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டம் சிர்வாரா கிராமத்தில் வசித்து வரும் 10 வயது சிறுவன், அங்குள்ள ஏரியில் குளிக்க சென்று ஆழமான நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனை காணாது தேடியலைந்த பெற்றோர், மகனின் உடலை கிராம மக்கள் உதவியுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்டனர். அப்பகுதியில் வசித்து வந்த மூடநம்பிக்கை கொண்டவர் பெற்றோரிடம் யோசனை ஒன்றை கூறியுள்ளார்.
அதன்படி, ஊர்மக்கள் சேர்ந்து சிறுவனை உயிர்த்தெழ வைக்கலாம் என எண்ணி சிறுவனின் உடலில் தலையை தவிர்த்து உடலில் முழுவதிலும் உப்பை கொட்டி புதைத்துள்ளனர். ஆனால், 8 மணிநேரம் ஆகியும் சிறுவன் உயிர்த்தெழவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை நல்லடக்கம் செய்ய அறிவுறுத்தியத்தின் பேரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.