இப்படி ஒரு அதிசயமா... காட்டில் உள்ள மரத்தை வெட்டியதும் பீறிட்டடித்த தண்ணீர்! போலீஸே அதிர்ந்த அந்த தருணம்..... இணையத்தில் வைரலாகும் ஆச்சர்ய வீடியோ..!!!
கர்நாடகாவின் காளி புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்ட சாஜ் மரம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மரத்தின் தண்டைப் பகுதி வெட்டியவுடன் அதிலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘சாஜ்’ என அழைக்கப்படும் இந்த மரம் ‘அசன்’ என்ற பெயராலும் அறியப்படுகிறது. பொதுவாக காடுகளின் உயிர்நாடியாக மரங்கள் கருதப்பட்டாலும், இந்த வகை மரங்கள் தங்களுக்குள் நீரைச் சேமித்து வைக்கும் தன்மையால் வனத்துறையினரிடையே தனி கவனத்தை பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பார்க்கும்போதே புல்லரிக்குது..... உள்ளங்கையில் விஷப்பாம்பிற்கு தண்ணீர் கொடுத்த நபர்! பாம்பு குடிக்கிறத பாருங்க... திக் திக் நிமிட வீடியோ..!!!
கத்தியால் வெட்டியதும் பீறிட்ட தண்ணீர்
ஐ.எஃப்.எஸ் அதிகாரி ரஜத் குமார் சிங் பகிர்ந்துள்ள வீடியோவில், வனத்துறை அதிகாரி ஒருவர் மரத்தின் தண்டில் கத்தியால் இருமுறை வெட்டுகிறார். அதன்பின், உள்ளே மறைத்து வைக்கப்பட்ட தொட்டியைப் போல, தண்ணீர் வேகமாக வெளியேறுகிறது.
வீடியோவில் அந்தத் தண்ணீரை கிளாஸில் பிடித்து காட்டிய அதிகாரி, பின்னர் அதை நேரடியாகக் குடித்தும் காணப்படுகிறார். லேசான மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், அந்த நீர் குடிக்க ஏற்றதாக இருப்பதாக கூறப்படுகிறது.
கோடைக்காலத்தில் மரத்திற்கே உதவும் சேமிப்பு
தகவலின்படி, இந்த மரத்தின் அகலமான மற்றும் வெற்றிடத்தன்மை கொண்ட கிளைகள் மழைநீரை சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. கோடைக் காலங்களில் மரம் தனது தேவைக்காக அந்த நீரை பயன்படுத்திக் கொள்கிறது.
மீதமுள்ள நீர், காட்டு வழியாகச் செல்லும் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்களின் தாகத்தையும் தணிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மரம் இயற்கையின் சிறிய நீர்த்தொட்டியாகவே பார்க்கப்படுகிறது.
நெட்டிசன்கள் பகிரும் கவலை
வீடியோ வைரலான நிலையில், பலரும் இயற்கையின் அதிசயமாக இதைப் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், மனிதர்கள் சுயநலத்திற்காக மரங்களில் துளையிட்டு தண்ணீரை எடுப்பது தவறானது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
இயற்கையாகவே மரம் தன்னுடைய வாழ்விற்காக சேமித்து வைத்திருக்கும் நீரை பாதுகாக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: சின்ன விஷயம் தான்... ஆனால்.... மேடையில் யுவராஜ் சிங்குக்கு உதவிய பிரபல நடிகை! இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!!