டார்ச்சல் தாங்க முடியல! கணவன் வீட்டில் வரதட்சணை கொடுமை! 3 வயது குழந்தையுடன் தீக்குளித்து உயிரிழந்த தாய்! பெரும் சோகம்..
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த துயர சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. துன்புறுத்தலால் விரிவுரையாளராக பணியாற்றிய பெண் மற்றும் அவரது 3 வயது மகள் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயும் மகளும் உயிரிழந்த சோகம்
ஜோத்பூர் மாவட்ட சரணாடா கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளரான சஞ்சு பிஷ்னோய் (32), தனது மகள் யஷஸ்வி (3) உடன் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். அக்கம் பக்கத்தினர் புகையை கண்டு உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஞ்சு தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்ப தகராறே காரணமா?
சம்பவத்திற்கு பின்னால் குடும்ப தகராறே காரணம் என தெரியவந்துள்ளது. சஞ்சுவின் பெற்றோர் அளித்த புகாரின் படி, அவருடைய கணவர் திலீப் பிஷ்னோய் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையே தாங்க முடியாமல் சஞ்சு தற்கொலைக்கு முனைந்ததாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
இதையும் படிங்க: கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி! 4 வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து! பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி ! பதறவைக்கும் சம்பவம்...
தற்கொலைக்குறிப்பு மீட்பு
சம்பவ இடத்தில் இருந்து சஞ்சு எழுதிய தற்கொலைக்குறிப்பு மீட்கப்பட்டுள்ளது. அதில் திலீப் பிஷ்னோய் மற்றும் அவரது குடும்பத்தினருடன், கண்பத் சிங் என்ற நபரும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இவர்களே தனது மரணத்திற்கு காரணம் எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரிதாபகரமான சம்பவம் குடும்ப உறவுகளில் நிலவும் அழுத்தங்களையும், சமூகத்தில் துன்புறுத்தல் எதிர்ப்பு அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்துகிறது. சஞ்சு மற்றும் அவரது மகளின் உயிரிழப்பு, அங்குள்ள மக்களின் இதயத்தை பிளந்துள்ளது.
இதையும் படிங்க: உயிரை விட பேரன் தான் பெருசு! நடுரோட்டில் பயங்கரமாக மோதிய லாரி! தனது உயிரை பணயம் வைத்து பாட்டி செய்த அதிர்ச்சி செயல்! பகீர் சம்பவம் !