Perfume-ல் Bomb தயாரித்து பயங்கரவாத தாக்குதல்.. ஜம்முவில் பரபரப்பு சம்பவம் அம்பலம்.. அதிர்ச்சியில் மக்கள்.!

Perfume-ல் Bomb தயாரித்து பயங்கரவாத தாக்குதல்.. ஜம்முவில் பரபரப்பு சம்பவம் அம்பலம்.. அதிர்ச்சியில் மக்கள்.!


jk-ied-perfume-bomb-recover-form-terrorist

நறுமண வாசனைக்கு வாங்கி அடிக்க பயன்படுத்தும் வாசனை திரவியத்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டாக மாற்றிய பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதியில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் அடுத்தடுத்த 20 நிமிடங்களில் நடைபெற்றன. இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில், விஷயம் தொடர்பாக காஷ்மீர் காவல்துறையினர் விசாரணை செய்து பயங்கரவாதி ஆரிப் என்பவனை கைது செய்தனர். 

Perfume IED Bomb

அவனிடம் விசாரணை நடத்திய போது, கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுடன் இரகசிய தொடர்பை வைத்திருந்த ஆரிப், ஜனவரி 20ல் நடந்த தாக்குதலுக்கு முக்கிய நபராகவும் செயல்பட்டுள்ளார் என்பது அம்பலமானது. அதேபோல, இந்த தாக்குதலை புதிய வழியில் மேற்கொண்டுள்ளனர். 

Perfume IED Bomb

அதாவது, Perfumeல் IED வெடிகுண்டை உருவாக்கி, அதனை Perfume என யாரேனும் நினைத்து திறந்தால் அல்லது அழுத்தினால் வெடிகுண்டு வெடிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆரிப்-இடம் இருந்து Perfume ரக வெடிகுண்டை கைப்பற்றிய அதிகாரிகள், அதனை செயலிழக்க வைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இந்த தகவலை காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குனர் தில்பாக் சிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.