புத்தாண்டுக்கு வீட்டிற்கு வருகையில் சோகம்.. விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாப மரணம்.!

புத்தாண்டுக்கு வீட்டிற்கு வருகையில் சோகம்.. விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாப மரணம்.!


Jharkhand Road Accident Farmer Coli Workers 6 Died Accident

வேலையை முடித்துவிட்டு வேனில் வீட்டிற்கு திரும்பிய விவசாய கூலி தொழிலாளர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலமு மாவட்டம், ஹரிஹரகன்ச் பகுதியில் நேற்று வேனும் - சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வாகனங்களில் பயணித்த 3 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். 

பலமு மாவட்டத்தினை சார்ந்த விவசாய தொழிலாளர்கள், அண்டை மாநிலமான பீகாரில் உள்ள சஹீடி கிராமத்தில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுவிட்டு, மீண்டும் கிராமத்திற்கு திரும்பிக்கொண்டு இருக்கையில் சோகம் நடந்துள்ளது.

Bihar

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்துள்ள நபர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.