ஜார்க்கண்ட் அமைச்சர் கொரோனாவால் மரணம்! வேதனையுடன் இரங்கல் தெரிவித்த ஜார்கண்ட் முதலமைச்சர்!

ஜார்க்கண்ட் அமைச்சர் கொரோனாவால் மரணம்! வேதனையுடன் இரங்கல் தெரிவித்த ஜார்கண்ட் முதலமைச்சர்!



jargand minister passed away

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் 73 வயதான ஹாஜி உசேன் அன்சாரி கொரோனா பாதிக்கப்பட்டநிலையில் மரணமடைந்துள்ளார்.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சிபுசோரன் தலைமையிலான அரசில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் 73 வயதான ஹாஜி உசேன் அன்சாரி. 

சமீபத்தில் அமைச்சர்  ஹாஜி உசேன் அன்சாரிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் ஹாஜி உசேன் அன்சாரி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஹாஜி உசேன் அன்சாரி மரணத்தால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். நமது தனி மாநிலத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மறைந்த ஹாஜி உசேன் அன்சாரிக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவு செய்துள்ளார்.