இந்தியா

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு

Summary:

Janatha curfews announced for 21 days

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா  வைரஸ் தற்போது உலகெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ்  இந்தியாவில் பரவிய நிலையில் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா  வைரஸை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு  வெளியேறாமல் இருக்குமாறு  அறிவுறுத்தப்பட்டனர். 

இந்நிலையில் தற்பொழுது நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு  கடைபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் என்ன நடந்தாலும் வீட்டை விட்டு  வெளியே  வர கூடாது. அடுத்த 21 நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் எனவே கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் வீட்டில் இருக்க வேண்டும் என மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Advertisement