சாதிய பாகுபாட்டால் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை... உடலை வாங்க மனைவி போராட்டம்.!!
சண்டிகர் மாநிலம் ஹரியானா காவல்துறை உயர் அதிகாரியான ஐபிஎஸ் புரான் குமார் கடந்த 7ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியின் மூலம் தன்னை தானே சுட்டு உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்பு தற்கொலைக்கான காரணத்தை கடிதத்தில் எழுதியிருந்தார்.
அவர் எழுதிய கடிதத்தில் ஹரியானா டிஜிபி சத்ருஜித் கபூர் மற்றும் 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீண்ட நாட்களாக சாதிய பாகுபாட்டை காரணம் காட்டி அவரை கொடுமை செய்துள்ளார்கள். இதனால் மன உளைச்சலில் ஐபிஎஸ் அதிகாரி புரான் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதற்கடுத்து புரான் குமாரின் மனைவியும், ஐபிஎஸ் அதிகாரியுமான அம்னீத், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமான நபர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கடந்த 8 நாட்களாக போராட்டம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: விபச்சாரத்தை தட்டி கேட்டதில் தகராறு... அப்பாவி பெண் தூக்கு போட்டு தற்கொலை.!! உறவினர்கள் போராட்டம்.!!
பின்னர் தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் கடந்த 8 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்ய சம்மதித்தார். இதன்படி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரியே சாதிய பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் சோகம்... காதலியால் வந்த வினை.!! ரயில் முன் பாய்ந்த 25 வயது இளைஞர்.!!