நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
விபச்சாரத்தை தட்டி கேட்டதில் தகராறு... அப்பாவி பெண் தூக்கு போட்டு தற்கொலை.!! உறவினர்கள் போராட்டம்.!!
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு பகுதியை அடுத்துள்ள பண்ணூர் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் என்பவரின் மனைவி ஜோதி சாந்தி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண்ணான பாத்திமா என்பவரின் வீட்டில் நீண்ட நாட்களாக விபச்சாரம் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு நபரான பிரான்சிஸ்கோ என்பவர் சம்பந்தப்பட்ட பாத்திமாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.
பிரான்சிஸ்கோ, பாத்திமாவை கண்டித்ததற்கு ஜோதி சாந்தி காரணம் என கருதிய பாத்திமா மற்றும் அவரது உறவினர்களான ஏஞ்சல், கீதா, கஷ்யா, எழில் ஆகியோர் நேற்று முன்தினம் சாந்தியின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகள பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்த நிலையில் கடும் மன உளைச்சலடைந்த ஜோதி சாந்தி வீட்டிலுள்ள படுக்கையறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மகன் ஆண்ட்ரூ, மகள் ஜேன்ரெனி கிளா ஆகியோர் ஜோதி சாந்தியை மீட்டு சந்தவேலுார் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஜோதி சாந்தி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்ட ஆரம்ப சுகாதார மையத்திற்கு வந்து ஜோதி சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தலைநகரில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை.!! காவல்துறை விசாரணை.!!
இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியவர்களை காவல்துறை கைது செய்ய மறுப்பதாக கூறி இறந்து போன ஜோதி சாந்தியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உறவினர்களிடம் சமரசமாக பேசியதால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்திருக்கிறது.
இதையும் படிங்க: போதை கொடுமை... உயிரை மாய்த்து கொண்ட தொழிலாளி.!! போலீஸ் விசாரணை.!!