நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
போதைப் பெண் கூட்டு பலாத்காரம்... ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது.!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், ராஜேந்திரநகர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி ஒரு பெண்ணின் சடலம் புதர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த விசாரணையை தீவிர படுத்திய போலீசார் குற்றவாளிகளிகளை கைது செய்துள்ளனர்.
கடந்த 14 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பெண் போதையில் நடுரோட்டில் தள்ளாடி சென்றுள்ளார். இதை கவனித்த 33 வயது நபர் அந்தப் பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்று அந்தப் பெண்ணுக்கு மது மற்றும் பிரியாணியை வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரை ஆராம்கர் சந்திப்பில் இறக்கிவிட்டு தப்பித்துள்ளார்.

இதனையடுத்து இந்தப் பெண்ணை 25 மற்றும் 26 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்று கிஸ்மத்பூர் பாலத்தின் கீழ் கொண்டு சென்று இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண் தப்பிக்க முயன்ற போது அவரை அடித்து கொடூரமாக தாக்கி கொலை செய்து அருகிலுள்ள புதரில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: காதலியை நண்பனுக்கு விருந்தாகிய ரவுடி.. கொலையில் முடிந்த கள்ள உறவு.!! அதிர்ச்சி பின்னணி.!!
சம்பவ இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளாகிய மூவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... கள்ள உறவில் வாக்குவாதம்.!! இளம் பெண் கொடூர கொலை.!!