சீமா ஹைதரை போல, பாகிஸ்தானியரை கரம்பிடித்த இந்திய பெண்.. குடும்பத்தோடு தூக்கிய போலீஸ்.. விபரம் உள்ளே.!

சீமா ஹைதரை போல, பாகிஸ்தானியரை கரம்பிடித்த இந்திய பெண்.. குடும்பத்தோடு தூக்கிய போலீஸ்.. விபரம் உள்ளே.!



Indian Women Married Pak Youngster in Dubai now Hyderabad Cops take Action 

புகைப்படம்: பயாஸ் மற்றும் அவரின் காதலி நேஹா

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்மணி, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேபாளம் வழியே இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து காதலர் சச்சினை கரம்பிடித்தார். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் விஷயமாக பார்க்கப்பட்டது. எல்லைதாண்டி நேபாளம் வழியே சட்டவிரோத முறையில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் வருவதும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் வசித்து வந்த முகமது பயாஜ் என்ற பாகிஸ்தானியர், ஆகஸ்ட் 31ல் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் தனது இந்திய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 2022ல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கிஷன்பக் பகுதியில் தனது மாமியாரின் வீட்டில் குடும்பத்தோடு தங்கி இருக்கிறார். 24 வயதாகும் முகமது பயாஸின் சொந்த ஊர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம் ஆகும். துபாயில் செயல்பட்டு வரும் கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். 

Indiaகாதலர் சச்சின், சீமா ஹைதர் மற்றும் அவரின் குழந்தைகள்

கடந்த 2019ல் இந்தியாவில் இருந்து துபாய் சென்ற நேஹா பாத்திமாவுக்கு (வயது 29) பயாஸ் வேலை கிடைக்க உதவி செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மாறி திருமணம் செய்து துபாயிலேயே வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இருவருக்கும் 3 வயதுடைய குழந்தையும் தற்போது இருக்கிறது.

நேஹா தனது உடல்நல பிரச்சனை காரணமாக இந்தியாவுக்கு வந்துவிட, குழந்தை மற்றும் மனைவியை பார்க்க வழியின்றி தவித்த பயாஸ், சட்டவிரோதமாக தனது மாமியார் குடும்பத்தின் உதவியுடன் உள்ளூர் அடையாள அட்டையை முறைகேடாக பெற்று நேபாளம் வழியே இந்தியாவுக்குள் நுழைந்து ஹைதராபாத் வந்துள்ளார்.

தற்போது பயாஸின் பாஸ்போர்ட் கலவாதியாகியுள்ளது. அவரை கைது செய்த அதிகாரிகள், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியின் குடும்பத்தாரையும் கைது செய்தனர். போலியான அடையாள அட்டைகள் தயாரித்து வழங்கியவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக இருக்கும் 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.