டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு.. 45 துப்பாக்கிகளுடன் தடாலடியாக நுழைந்த தம்பதிகள்..! பதறிப்போன அதிகாரிகள்..! indian couples arrested in delhi airport

சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் இருவர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினர்.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமிலிருந்து வந்த இந்திய தம்பதியினர் இருவர் துப்பாக்கிகளை கடத்தி வந்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 45 துப்பாக்கிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில், துப்பாக்கிகள் அனைத்தும் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டில் இருந்ததாக முதற்கட்ட விசாரணை அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.22.5 லட்சம் என்றும், தம்பதிகளின் பெயர் ஜக்ஜித் சிங் - ஜஸ்விந்தர் கவுர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 10ஆம் தேதி வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து இந்தியா திரும்பிய இருவரையும் சுங்கத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது ஜக்ஜித் சிங் இரண்டு டிராலி பேக்குகளில் கைத்துப்பாக்கியை கொண்டு வந்ததை தொடர்ந்து, துப்பாக்கிகளை அவருக்கு அவரது சகோதரர் மஞ்சு சிங் கொடுத்துவிட்டு விமான நிலையத்திலிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.