Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
உலகின் நீளமான தலைமுடி வளர்த்து இந்திய சிறுவன் கின்னஸ் சாதனை.!
உலகின் நீளமான தலைமுடி வளர்த்து இந்திய சிறுவன் கின்னஸ் சாதனை.!

உலகிலேயே நீளமான தலைமுடியை வளர்த்து இந்திய சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பலரும் பல்வேறு சாதனைகள் படைப்பதற்காக வழக்கத்திற்கு மாறாக சில செயல்களை செய்து வருகின்றனர். அதன்படி நீளமான மற்றும் அகலமான உடல் பாகங்கள் மற்றும் சமையல், நடனம், விளையாட்டு போன்றவற்றிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் சிகத்தீப் சிங் இதுவரை தனது தலை முடியை வெட்டாமல் நீளமான கூந்தலை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அதன்படி அவரது தலைமுடியின் நீளம் 130 சென்டிமீட்டர் அல்லது 4 அடி மற்றும் 3 அங்குளத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிய அனைவரையும் வியக்க வைத்துள்ளது.