
Indian army given money for corona relief
இந்திய துணை இராணுவ பாதுகாப்பு படை சார்பாக 116 கோடி ரூபாயை மத்திய உள்துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், நம் தேசத்தை பாதுக்கும் பணியில் இருக்கும், ராணுவ வீரர்கள், நம் தேச வளர்ச்சிக்கும் எங்கள் பங்கு உண்டு என நிரூபித்து, இந்திய துணை இராணுவ பாதுகாப்பு படை சார்பாக 116 கோடி ரூபாயை மத்திய உள்துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.
Advertisement
Advertisement