44 வீரர்களின் மரணத்திற்கு, இந்திய ராணுவம் பதிலடி!! மூவர் பலி!



indian army attack


புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில்,  கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள முகாமுக்கு ராணுவ வாகனங்களில் சென்றனர்.

மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன. அந்த பயங்கரவாத தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது.

indian army

இதனையடுத்து, தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் இந்திய இராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் குல்காம் மாவட்டம் துரிகாம் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக தகவல் வந்த நிலையில், ராணுவத்தினரும், காஷ்மீர் போலீஸாரும் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். 

அங்கு தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஜெயிஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த மூவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அமன் தாக்கூர் மற்றும் ராணுவ வீரர் ரன்வீர் உயிரிழந்தனர்.