இந்தியா Covid-19

உலகிலேயே இந்தியாவில் தான் இறப்பு விகிதம் குறைவு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Summary:

India corono death rate is lowest in the world

உலகம் முழுவதும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள 3.2% தான் உலகிலேயே குறைவான இறப்பு விகிதம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இதுவரை கொரோனா வைரஸ் 34 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. இதில் இதுவரை உலக அளவில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மேல் பபலியாகியுள்ளனர். உலக அளவில் இறப்பு சதவிகிதம் 7% ஆக உள்ளது.

அதிகமான கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவில் இதுவரை 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 67 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அங்கு இறப்பு விகிதம் 5 ஆக உள்ளது.

அதே சமயத்தில் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் பேரில் 1325 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் இறப்பு விகிதம் 3.2% ஆக உள்ளது.  இந்தியாவில் ஏற்பட்டுள்ள 3.2% தான் உலகிலேயே குறைவான இறப்பு விகிதம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.


Advertisement