இந்தியா உலகம்

இந்தியா - சீன எல்லையில் கடும் பதற்றம்! சமரசம் செய்ய தானே முன்வந்த அமெரிக்கா!

Summary:

india china problem

இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் சாலை அமைப்பது, ராணுவ கட்டமைப்புகளை பலப்படுத்துவது போன்ற பணிகளை சீனா ஏற்கனவே செய்தது. இதேபோல் இந்தியாவும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குள் சாலை அமைப்பது, பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறது. 

எல்லையில் இந்திய ராணுவத்தின் பலம் அதிகரிப்பதை தனக்கு ஆபத்து என்று அந்த நாடு கருதுவதால், இதை சீனா முற்றிலும் விரும்பவில்லை. இதனால் லடாக் மற்றும் வடக்கு சிக்கிமின் எல்லைப்பகுதியில் சீன ராணுவ வீரர்கள், நமது வீரர்களுடன் மோதலில் ஈடுபடுகிறார்கள். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. லடாக் எல்லையில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது. அங்கு போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது சீனா. இதேபோல் இந்தியாவும் எல்லையில் தனது படை பலத்தை அதிகரித்து வருகிறது. 


இந்தநிலையில், முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, சீனாவுக்கு இணையாக படைகளை குவிப்பது, சாலை கட்டுமான பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.


Advertisement