இந்தியா

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா பிடித்துள்ள இடம் என்ன தெரியுமா?

Summary:

In world level india 10th place of corona affected

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இதுவரை உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 55,88, 020 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,47, 872 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 23, 65,703 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது 23,74, 445 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும் உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 17,06 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99,805 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது.இதுவரை  இந்தியாவில் மட்டும் 1,44, 950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,172 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement