16 வயது சிறுமியை காரில் கடத்தி சீரழித்த இளைஞர்; ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டு பெருங்கொடுர செயல்.!



in Uttar Pradesh Moradabad minor Girl Abused in Running Car 

 

 

காரில் சிறுமியை சீரழித்த இளைஞர், ஓடும் காரில் இருந்து அவரை தள்ளிவிட்ட கொடுமை நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முரதாபத் மாவட்டத்தில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது பெற்றோருடன் இருக்கிறார். பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள். 

இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் திருட்டு முயற்சி.. ஊரே கூடி திருடனை கொலை செய்த பயங்கரம்.. திடுக்கிட வைக்கும் காட்சிகள்.!

நேற்று வழக்கம்போல பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிட, வீட்டில் சிறுமி தனியே இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ரஷீத் என்ற நபர், சிறுமியை அழைத்து காரில் கடத்தி சென்று இருக்கிறார். 

Uttar pradesh

சிறுமி பலாத்காரம்

பின் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், தனது ஸ்மார்ட்போனில் அதனை வீடியோ எடுத்து வைத்து இருக்கிறார். 

ஒருகட்டத்தில் சிறுமியை காரில் இருந்து தள்ளிவிட்டவர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரஸீத்தை கைது செய்தனர்.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்து தானும் தூக்கில் தொங்கிய கணவர்; கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்.!