புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பெண் காவலருக்கே நடுரோட்டில் இப்படியா?.. கான்ஸ்டபிளால் நடந்த பரபரப்பு சம்பவம்..! வேடிக்கை பார்த்த மக்கள்.!
உலகம் நவீனமயமாகும்போது, அது தனக்கே உரித்தான பல நன்மைகளை இழக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி காவல் நிலையத்தில், காவலராக வேலை பார்த்து வருபவர் அங்கித் யாதவ். இவர் சம்பவத்தன்று சாலையில் பணியை முடித்துவிட்டு, நடந்து சென்றுகொண்டு இருந்த பெண் காவலரை இடைமறித்தார்.
இதையும் படிங்க: மழையின்போது மொட்டை மாடி டான்ஸ் பிரியரா நீங்கள்?.. திடீரென தாக்கிய மின்னல்.! ரீல்ஸ் மோகத்தால் பகீர்.!
இருசக்கர வாகனத்தில் வந்து பெண் காவலரை இடைமறித்த அங்கித், அவரிடம் வாதம் செய்துகொண்டு இருந்தார். சாலையில் பலரும் இவர்களை கவனித்த நிலையில், யாருமே பெண் காவலருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
உதவ முன்வராத மக்கள்
மேலும், அங்கு என்ன நடக்கிறது? காவலர் என்ன விசாரிக்கிறார்? என கேட்க கூட யாரும் நினைக்கவில்லை. பலரும் இதனை பார்த்தவாறு கடந்து சென்றனர். ஒருசிலர் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இறுதியாக பெண் காவலரின் கைகளை பிடித்து சர்ச்சை செயலில் ஈடுபட்ட யாதவ், அங்கிருந்து சென்றார். இந்த விஷயம் குறித்த காணொளி, அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்தி அங்கித் யாதவை பணியிடைநீக்கம் செய்தனர். இந்த விசயத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அயோத்தி காவல்துறை தெரிவித்து இருக்கிறது.
यूपी अयोध्या की ये तस्वीरें देखिए....।
— Amit Verma (@Amitkvermaup) June 27, 2024
बाइक सवार सिपाही अंकित यादव आता है। पैदल जा रही महिला सिपाही का रास्ता रोकता है। हाथ पकड़ता है, उससे अभद्रता करता है। जबरन शादी का दबाव बनाता है। सिपाही अंकित पर FIR हो गई है। @Uppolice pic.twitter.com/effdyaLMAJ
இதையும் படிங்க: பக்ரீத் அன்று ரத்தம் தெறிக்கும்.. சர்ச்சை வீடியோ வெளியிட்ட இளைஞர்.. கர்ஜனையும், கதறலும்..!