புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மழையின்போது மொட்டை மாடி டான்ஸ் பிரியரா நீங்கள்?.. திடீரென தாக்கிய மின்னல்.! ரீல்ஸ் மோகத்தால் பகீர்.!
பீகார் மாநிலத்தில் உள்ள சிதமார்ஹி மாவட்டம், பரிகார, சிரஸிஆ பஸார் பகுதியை சேர்ந்தவர் சானியா குமாரி. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வீடியோ எடுத்து பதிவு செய்யும், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆவார்.
இதனிடையே, சம்பவத்தன்று சானியா, தேவநாராயணன் பாகல் என்பவரின் வீட்டின் மொட்டைமாடிக்கு சென்று மழை பெய்யும்போது வீடியோ எடுக்க முயற்சித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பக்ரீத் அன்று ரத்தம் தெறிக்கும்.. சர்ச்சை வீடியோ வெளியிட்ட இளைஞர்.. கர்ஜனையும், கதறலும்..!
திடீரென தாக்கிய மின்னல்:
மழையின்போது அவர் நடனமாடியபடி வீடியோ எடுக்க முயற்சித்த நிலையில், அச்சமயம் அவருக்கு மிக அருகில் வீட்டின் பகுதியை மின்னல் தாக்கியது. இந்த சம்பவம் அவரின் நண்பர்களால் எதிர்பாராத விதமாக படமாக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், மழை நேரங்களில் மொட்டை மாடியில் நடனமாடுவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
விபரீத முயற்சி வேண்டாம்
மழை நேரங்களில் மின்னல் தாக்கும்போது, அவை உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் பெண்மணி லேசான காயங்கள் இன்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ரீல்ஸ் மோகம் என்றுமே மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். அதிஷ்டம் ஒன்றே பெண்ணை காப்பாற்றி இருக்கிறது என பலரும் கருத்து கூறுகின்றனர்.
Lightning Strikes are Real:
— Namma Karnataka Weather (@namma_vjy) June 26, 2024
Take adequate care when you are in the midst of a thunder Storm. Standing under a tree or lamppost, Rain dance on Terrace etc is very dangerous.
Source: @TimesNow pic.twitter.com/oV1rRYBMWK
இதையும் படிங்க: அலட்சியத்தால் நொடியில் நடந்த பதைபதைப்பு விபத்து; பதறவைக்கும் வீடியோ.!