அடேங்கப்பா..! எம்புட்டு பெருசு..! கிணற்றுக்குள் விழுந்த ராஜநாகம்.! போராடி மீட்ட மீட்புக்குழுவினர்.! வைரல் புகைப்படங்கள்.!

அடேங்கப்பா..! எம்புட்டு பெருசு..! கிணற்றுக்குள் விழுந்த ராஜநாகம்.! போராடி மீட்ட மீட்புக்குழுவினர்.! வைரல் புகைப்படங்கள்.!



In Odisha Village People Find Huge King Cobra Inside Well

ஒடிசா மாநிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து ராஜநாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டதில் உள்ள புருஹாரி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை அங்குள்ள கிணறு ஒன்றில் ராஜநாக பாம்பு ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் நபர்களுடன் அந்த இடத்திற்கு சென்ற அதிகாரிகள் 
சுமார் ஒரு மணி நேர கடின உழைப்புக்குப் பிறகு கிணற்றில் இருந்த பாம்பை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட ராஜநாக பாம்பு தோராயமாக 12-15 அடி நீளம் கொண்டது என்று அணியின் குழு உறுப்பினர்களான ஸ்வப்னாலோக் மிஸ்ரா மற்றும் மிஹிர் பாண்டே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட பாம்பின் புகைப்படாமது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும் மீட்கப்பட்ட பாம்பு சுகாதார பரிசோதனைக்கு பின்னர் கல்லிகோட் வன அதிகாரியின் உத்தரவின் பேரில் பின்னர் காட்டில் விடுவிக்கப்பட்டது.

ராஜநாகம் உலகில் உள்ள மிகவும் நீளமான விஷ பாம்பு, இது இந்தியாவின் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதேபோல் 15 அடி நீளமுள்ள ராஜநாகம் ஓன்று சில வாரங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் அருகே ஒரு கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.