தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் கார்ட்டூன் வீடியோ; 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா, கல்கோட்டி திவாரி கிராமத்தை சார்ந்தவர் ஹெர்பியால் சிங். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 9 வயதுடைய மகன் ஆகியோர் இருக்கின்றனர்.
இவர் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். தினமும் காலை நேரத்தில் வயல்வெளிக்கு வேலைக்காக செல்லும் இவர், மீண்டும் மாலை நேரத்தில் வீடு திரும்பும் நிலையில், இவர்களின் 9 வயது மகன் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம்.
வீட்டில் இருக்கும் செல்போனை தினமும் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட இவர்களின் 9 வயது மகன், வீட்டில் இருந்தபடி எப்போதும் கார்ட்டூன் சம்பந்தமான வீடியோக்களை செல்போனில் பார்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: கோவில் சுற்றுச்சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரம்; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.. நிதிஉதவி அறிவிப்பு.!
பல நேரங்களில் சார்ஜ் போட்டுக் கொண்டு அதனை செயல்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது.
அந்த சம்பவத்தில் சிறுவனின் கை, கால், தலையில் காயம் ஏற்படவே, சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
இதையும் படிங்க: கோவில் வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து சோகம்; 9 பேர் பரிதாப பலி.!