கோவில் வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து சோகம்; 9 பேர் பரிதாப பலி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில், உள்ளூர் சாமியார் சார்பில் பிரத்தியேக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று காலை அந்நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
சுவர் இடிந்து விழுந்து சோகம்
இதனிடையே, கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் இருந்த நிலையில், அதன் அருகே 10 க்கும் மேற்பட்ட சிறார்கள் இருந்தனர். இன்று காலை 8 மணிக்கு மேல் திடீரென சுவர் இடிந்து விழுந்தது.
இதையும் படிங்க: சாக்கடைக்குள் விழுந்த தாய், குழந்தை பரிதாப பலி; மகனை இறுக்கப் பிடித்தவாறு சடலமாக மீட்பு.!!
வலுவிழந்த சுவர்
இந்த விபத்தில் 9 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். விசாரணையில், தொடர் மழை காரணமாக சுற்றுச்சுவர் வலுவிழந்து காணப்பட்டுள்ளது. அது தெரியாமல் சுவருக்கு அருகே சிறார்கள் கும்பலாக இருந்தபோது சோகம் நடந்துள்ளது அம்பலமானது.
இதையும் படிங்க: ஒருசில நொடிகள் தான்.. ஜிம்மில் தொழிலதிபர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!