தீராத வயிற்று வலியால் இளம்பெண் விபரீத முடிவு.. 20 வயதில் நேர்ந்த சோகம்.!



in Karnataka Kolar Gil Dies by Suicide 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், பங்காருபேட்டை, பாலமுருகன் சாலையில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு. இவரின் மகள் தேஜஸ்வினி (வயது 20). இளம்பெண் பியுசி படித்துவிட்டு, நகரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். 

கடந்த சில மாதமாக இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. இது அவருக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: மாரடைப்பால் அண்ணன் - தம்பி அடுத்தடுத்து பலி.. குடும்பத்தினர் கண்ணீர் சோகம்.!

karnataka

தூக்கிட்டு தற்கொலை

நேற்று மீண்டும் கடுமையான வயிறு வலி ஏற்படவே, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், விரக்தியில் இருந்த தேஜஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  

பின் வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதைக்கண்டு அலறினர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பேருந்துக்கு நடுவே சிக்கி அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ.. பிறந்தநாளை கொண்டாட காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!