டெல்லி தேசிய சட்டக்கல்லூரியில் சோகம்; சென்னை மாணவி தற்கொலை.. கடிதத்தில் பகீர் தகவல்.!
டெல்லியில் உள்ள துவாராகவில், தேசிய சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், சென்னையில் உள்ள ஐயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மகள் அமிர்த வர்ஷினி, மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
நேற்று மாணவி கல்லூரி வகுப்புக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். அவருடன் இருந்த மாணவி வகுப்பறைக்கு சென்று, பின் மீண்டும் வரும்போது வர்ஷினி சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
தகவலின்பேரில் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி எழுதிய கடிதத்தில், "தனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பயில்லை" என கூறியுள்ளார்..
இதையும் படிங்க: இதுக்கெல்லாமா தற்கொலை?.. தேங்காய் தண்ணீர் கொடுக்காததால், 15 வயது சிறுவன் தற்கொலை..!
கடந்த ஏப்ரல் மாதம் 1 வாரம் வீட்டிற்கு சென்று மீண்டும் கல்லூரிக்கு வந்த சிறுமி, தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி வர்ஷினி படிப்பு சம்பந்தமாக பதற்றத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க: "வாழ்க்கைல கல்யாணம் மட்டும் பண்ணிடாதீங்க" மனைவி தொல்லையால் கண்கலங்கி கணவர் தற்கொலை.!