கணவரை குத்திக்கொன்று குடலை உருவிய விபரீதம்.. பிள்ளைப்பேறுக்காக அமானுஷ்ய மனைவியின் அதிரவைக்கும் செயல்.! 



Childless Couple Dispute Turns Fatal: Woman Arrested After Husband Found Murdered in Haryana

குழந்தையின்மை விவகாரத்தில் கணவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. 

வாடகை வீடு: 

உதித்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரின் மனைவி விமலா. தம்பதிகள் தற்போது ஹரியானா மாநிலம், குருஷேத்ரா சாலையில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். ராஜேஷ் குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இதையும் படிங்க: இப்படி ஒரு பொண்டாட்டியா? உன்னால் தான் எனக்கு ஆண் குழந்தை இல்லை! ஆத்திரத்தில் கணவனின் வயிற்றை கிழித்து.... வீட்டை திறந்த போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

குழந்தை இல்லை: 

தம்பதிகளுக்கு குழந்தை இல்லாதது தொடர்பாக அவ்வப்போது குடும்ப பிரச்சனை நடந்து வந்துள்ளது. மேலும், விமலா தேவி மாந்த்ரீகம் தொடர்பான சடங்குகளில் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, இவர்களின் வீட்டில் இருந்து சம்பவத்தன்று அலறலுடன் கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. 

அதிர்ச்சி: 

இதனால் பதறிப்போன வீட்டின் உரிமையாளர் ரிங்கு, மேல்தளத்துக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கொடூர உடல் காயத்துடன் இருந்துள்ளார். அவரின் மனைவி விமலா வயிற்றில் இருந்து வெளியே வந்த குடலை பையில் திணித்து இருக்கிறார். வீட்டின் உரிமையாளரை பார்த்த பதற்றத்தில் விமலா தேவி அங்கிருந்து கீழே குதித்து படுகாயமடைந்தார். 

Crime news

விசாரணை: 

இந்த சம்பவத்தை நேரில் பார்த்து நிலைகுலைந்துபோன வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மாயம்: 

முதற்கட்ட விசாரணையில், ராஜேஷின் உடலில் வயிற்று பகுதியில் 35 செமீ அளவு அறுக்கப்பட்டது தெரியவந்தது. கல்லீரலின் ஒரு பகுதி, வலது சிறுநீரகம் மாயமாகி இருந்துள்ளது. இதுதொடர்பாக பெண்ணிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தலைமை ஆசிரியை கொடூர கொலை.. மாணவர்கள் அரங்கேற்றிய வெறிச்செயல்.. காரணம் என்ன?