பிச்சை எடுத்த மூதாட்டியின் வீட்டை திறந்தவர்களுக்கு மூளையில் காத்திருந்த பேரதிர்ச்சி! உறவினர்கள் செய்த அந்த ஒரு காரியம்....!!!



mandya-old-woman-beggar-saved-lakhs

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் உயிரிழந்தார். குடும்பத்தினர் கவனிக்காததால் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகக் கூறிய அவர், மிகவும் எளிமையான வாழ்க்கையையே நடத்தி வந்தார்.

ஆனால், அவரது இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் வீட்டுக்குச் சென்ற ஊர்மக்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் மூலைகளில் சாக்குமூட்டைகளில் ரொக்கப் பணமும் நாணயங்களும் குவிந்து கிடந்தன.

இதையும் படிங்க: வறுமையில் வாழ்ந்த முதியவர்! ஆனால் வீடு முழுக்கப் பண மூட்டைகள்.... எங்களுக்கு ஒரு ரூபா கூட வேணாம்! மசூதி வாசலில் பிச்சை எடுத்த முதியவர் இருக்கும் போது கோடீஸ்வரர்! கர்நாடகாவை அதிர வைத்த மர்மம்..!!!

சாக்குமூட்டைகளில் குவிந்த பணம்

அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தபோது, சுமார் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் இருந்தது தெரியவந்தது. பல ஆண்டுகளாக பிச்சை எடுத்துச் சேமித்த தொகையாக இது இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெளியுலகுக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய தொகையை அவர் சேமித்து வைத்திருந்தது அங்கு பெரும் பேசுபொருளாகியுள்ளது.

நன்கொடையை ஏற்க மறுத்த பள்ளிவாசல் நிர்வாகம்

மூதாட்டி பிச்சை எடுத்துச் சேர்த்த பணத்தை அவர் நீண்ட காலமாகச் சென்ற பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கலாம் என சிலர் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், பிச்சை மூலம் கிடைத்த பணத்தை ஏற்க முடியாது என்று பள்ளிவாசல் நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை எடுத்துச் சென்ற சகோதரர்

இதையடுத்து, மூதாட்டியின் சகோதரர் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்த பணம் மற்றும் நாணயங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் எடுத்துச் சென்றனர். வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாழ்ந்ததாக கருதப்பட்ட மூதாட்டி, ரூ.40 லட்சம் வரை சேமித்து வைத்திருந்தது அவரது மறைவுக்குப் பிறகே தெரியவந்துள்ளது.

 

இதையும் படிங்க: எப்படித்தான் மனசு வந்துச்சோ..... நள்ளிரவில் நீர்நிலை அருகே சிறுவனை தவிக்க விட்டுச் சென்ற தந்தை! பதறவைக்கும் சம்பவம்...!!!