"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
"வாழ்க்கைல கல்யாணம் மட்டும் பண்ணிடாதீங்க" மனைவி தொல்லையால் கண்கலங்கி கணவர் தற்கொலை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், டிஎல்எப் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜிகிஜித் சிங் ராணா (வயது 36). இவருக்கு திருமணம் முடிந்து இவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
புலந்த் சாகர் மாவட்டத்தில் உள்ள நர்சைனா பகுதியை சேர்ந்தவர், மருந்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, திருமணத்திற்கு பின்னர் இவரின் வாழ்க்கை எதிர்பாராத அளவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை.
வாழ்க்கையில் விரக்தி
தனது மனைவி, மைத்துனர் உட்பட பலரால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக பெரும் துயரத்தை சந்தித்து இருக்கிறார். இதனிடையே, ஒருகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சிங், செல்போனில் வீடியோ எடுத்து வைத்து தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிங்க: செல்பி எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி தம்பதி தற்கொலை.. தற்கொலை குறிப்பில் பகீர் தகவல்.!
அந்த வீடியோவில், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். திருமணம் மட்டும் செய்திடாதீர்கள். ஜெய் ஸ்ரீராம் என கூறி தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்த விடியோவை வாட்ஸப்பிலும் அனுப்பி வைத்துள்ளார். இந்த விஷயம் குறித்த விடீயோவின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
उत्तर प्रदेश : गाजियाबाद में 38 साल के जगजीत सिंह राणा ने फांसी लगाकर जान दी।
— Sachin Gupta (@SachinGuptaUP) September 3, 2024
मरने से पहले Video में कहा – "सब कुछ कर लेना, पर शादी मत करना। जय श्रीराम..."
जगजीत ने पत्नी और ससुरलवालों पर प्रताड़ित करने के आरोप लगाए हैं। pic.twitter.com/EnHvWE8Uvt
இதையும் படிங்க: அனுதினமும் கணவனுக்கு நரக வாழ்க்கை பரிசு; சோறு கூட போடாததால் விபரீத முடிவு.!