புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஆசைக்கு இணங்க மறுத்த 8 வயது சிறுவன் செங்கல்லால் அடித்தே கொலை; தலைநகரில் பயங்கரம்.!
8 வயது சிறுவன் பலாத்காரத்திற்கு மறுத்ததால் கொலை செய்த பயங்கரம் தலைநகரை அதிரவைத்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஷாஷீன் பாக் பகுதியில், கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடம் ஒன்றில் 8 வயதுடைய சிறுவனின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளி கைது
சிறுவன் யார்? அவரை கொலை செய்தது யார்? என விசாரணை நடந்தது. மேலும், சிறுவனை கொலை செய்ததாக சிசிடிவி வாயிலாக பிடா ஹுசைன் என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில், சிறுவனின் கொலையில் இருந்த மர்மம் விலகி, அதிர்ச்சி தகவல் அம்பலமானது.
இதையும் படிங்க: தலைநகரில் பயங்கரம்.. வீட்டு வாசலில் மாமா, மருமகன் சுட்டுக்கொலை.. நடுங்கவைக்கும் காட்சிகள்.!
பலாத்கார முயற்சி
அதாவது, சிறுவன் வசித்து வரும் அபுல் பசேல் என்க்ளேவ் பகுதியில், ஹுஸைனும் பணியாற்றி வந்துள்ளார். சிறுவன் தனியாக இருப்பதை கவனித்தனர், தன்னுடன் அழைத்து வந்து கட்டிட பணிகள் நடந்து வந்த இடத்தில் பலாத்காரத்திற்கு முயற்சித்துள்ளார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து, தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
செங்கல்லால் தாக்கி பறிபோன உயிர்
இதனால் ஆத்திரமடைந்த ஹுசைன் சிறுவனை செங்கல்லால் தாக்கியதில், சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். சிறுவன் இறந்ததும் உடலை அங்கேயே விட்டுவிட்டு ஹுசைன் தப்பிச்சென்றார். ஜாமியா பகுதியை சேர்ந்த ஹுசைன் கைது செய்யப்பட்டு, போக்ஸோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
தீபாவளி அன்று தான் தலைநகரில் மர்ம நபர் ஒருவரால் இரட்டைக்கொலை சம்பவம் வீட்டு வாசலில் நடைபெற்றது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: "எனக்கு அவங்க தான் முக்கியம்.." தோழிகளுக்காக மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.!!