இதற்கெல்லாமா தற்கொலை பண்ணுவாங்க...விரும்பியபடி கணவன் ஜாக்கெட் தைத்து தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு...

இதற்கெல்லாமா தற்கொலை பண்ணுவாங்க...விரும்பியபடி கணவன் ஜாக்கெட் தைத்து தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு...


Hyderabad women suicide

ஐதராபாத் அம்பெர்பெட் பகுதியில் உள்ள கோல்நாகா திருமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ்-விஜயலெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஸ்ரீநிவாஸ் தையல் தெழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் தனது மனைவிக்கு ஜாக்கெட் ஒன்றை தைத்து கொடுத்துள்ளார்.

ஆனால் அது விஜயலெட்சுமியின் விருப்பம் போல் இல்லை. ஆதனால் கோபமான விஜயலெட்சுமி தனது கணவரிடம் வேறு ஜாக்கெட் தைத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஸ்ரீநிவாஸ் ஒப்பு கொள்ளவில்லை.பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஸ்ரீநிவாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

suicide

அதனையடுத்து பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்பிய நிலையில் தாயை தேடியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த படுக்கையறை மட்டும் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால், இதுப்பற்றி ஸ்ரீநிவாஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீட்டிற்கு விரைந்த ஸ்ரீநிவாஸ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமி இறந்து கிடந்தது தெரியவந்தது.பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விஜயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.