ஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

ஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!


Hyderabad train accident CCTV footage

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில், கர்னூல் – செகுந்தராபாத் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சுமார் 10 . 30 மணி அளவில் கச்சிகுடா ரயில் பிளாட்பாரத்தை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது.

அப்போது அதே தண்டவாளத்தில் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட புறநகர் மின்சார ரயில் எதிரே வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம் புரண்டத்தில் சுமார் 16 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

train accidents in india

மின்சார ரயிலின் ஓட்டுநர் எஞ்சினில் சிக்கி கொண்ட நிலையில் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். தண்டவாளத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

அருகில் ரயில் நிலையம் இருந்ததால் இரண்டு ரயில்களும் மிதமான வேகத்தில் வந்துள்ளது. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.