தாயை உள்ளே வைத்து பூட்டிவிட்டு...... நிர்வாணமாக அம்மன் சிலையுடன் ஓடி உயிரை விட்ட பெண் இன்ஜினியர்...! தாய் கூறிய அதிர்ச்சி உண்மை... சல்லடை போட்டு தேடும் போலீஸ்!!!



hyderabad-tejaswini-temple-pond-death-investigation

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மென்பொருள் பொறியாளர் தேஜஸ்வினி, ஐதராபாத்தில் உள்ள ஆலய திருக்குளத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனநல சிகிச்சை பெற்று வந்த அவர், நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணிச்சுமைக்கு பிறகு மனநல சிகிச்சை

விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி, பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடுமையான பணிச்சுமை காரணமாக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்த அவர், பின்னர் ஐதராபாத்தின் நகரி பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். பணி இழப்பு மற்றும் மன உளைச்சல் காரணமாக சமீப காலமாக மனநல மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அடிக்கடி வீட்டுக்கு வந்த இளைஞர்! கணவரிடம் மனைவி சொன்ன பொய்! அதோடு நிக்கல... அம்மா வீட்டுக்கு போய் மனைவி செய்த அந்த ஒரு காரியம்.! அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில், தனது தாயை வீட்டிற்குள் வைத்து வெளிப்புறமாக கதவை பூட்டிவிட்டு தேஜஸ்வினி வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அருகிலிருந்த ஆலயத்திற்குள் சென்ற அவர், கருவறையில் இருந்த அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு ஓடியதாகவும், பின்னர் அருகே இருந்த திருக்குளத்தில் இறங்கியதாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.

சிலை தேடும் பணி தீவிரம்

மறுநாள் காலை வீட்டுக் கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்ததை கண்ட அவரது தாய், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வெளியே வந்தார். தொடர்ந்து தேடியபோது, திருக்குளம் பகுதியில் தேஜஸ்வினியின் உடல் மீட்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதற்கிடையில் அவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் அம்மன் சிலை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், தீயணைப்புத் துறையினர் குளத்தில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனது மகளுக்கு அடிக்கடி பயங்கரமான கனவுகள் வந்ததாக அவரது தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: இரவில் 2 பிள்ளைகளுக்கும் பிடித்த உணவு வாங்கி கொடுத்துட்டு அப்பா செய்த பயங்கரம் ! அடுத்த நாள் காலையில் வீட்டை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.... தூத்துக்குடியில் அரங்கேறிய பகீர் சம்பவம்.!!!