யாராவது வாங்க... என்னைய கொல்லப்போறா..! தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து கத்தியால் சரமாரி குத்து! சிசிடிவியில் சிக்கிய அந்த அதிர்ச்சி காட்சி!!!
ஹைதராபாத் அருகே உள்ள செகந்தராபாத்தில் குடும்ப சொத்துத் தகராறு காரணமாக மாமியாரை மருமகள் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த 60 வயதுக்கு மேற்பட்ட பத்மாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சொத்துத் தகராறில் வன்முறையாக மாறிய மோதல்
முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்துத் தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலின்படி, 33 வயதான மருமகள் திடீரென மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன்பின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் எதிர்த்து பேசிய பெண்! நிமிடத்தில் அரங்கேறிய அட்டூழியம்..... அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!!
சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், மருமகள் மாமியாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி, தொடர்ந்து கத்தியால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
மருமகள் கைது... போலீசார் தொடர்ந்து விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மாமியாரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 33 வயதான மருமகளை கைது செய்தனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த பத்மாவதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Family property dispute turns violent: Woman attacks mother-in-law with knife in Hyderabad, held pic.twitter.com/4p7LQP63hs
— Shakeel Yasar Ullah (@yasarullah) July 22, 2026
இதையும் படிங்க: திக் திக் காட்சி! நடுரோட்டுல கயிறோட கைதி செய்த அதிர்ச்சி செயல்! போலீஸையே அதிரவைத்த கைதி.. மரண பயத்தை காட்டிய என்கவுண்டர் வீடியோ...!!!