ஒட்டிப் பிறந்த சகோதரிகள்... 10-ஆம் வகுப்பு முதல் B.Com வரை சாதனை.! எஸ்பிஐ தேர்வில் அரசு வைத்த அதிர்ச்சியால் கதறும் சகோதரிகள்...!!!



hyderabad-conjoined-twins-sbi-exam-request

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த சகோதரிகள் வீணா மற்றும் வாணி, எஸ்பிஐ தேர்வை எழுதுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக உதவி கோரி கவனம் ஈர்த்துள்ளனர். தனித்தனியாக தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சவால்களை வென்று கல்வியில் சாதனை

தலைப்பகுதியில் முக்கிய ரத்த நாளங்கள் இணைந்த நிலையில் பிறந்த வீணா மற்றும் வாணி, மருத்துவ காரணங்களால் பிரிக்கப்படாமல் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். பெற்றோரால் கைவிடப்பட்ட பின்னர் அரசு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் இல்லத்தின் பராமரிப்பில் வளர்ந்த அவர்கள், பத்தாம் வகுப்பு, மேல்நிலைக் கல்வி மற்றும் பி.காம் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். தற்போது சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். மேலும், தேர்வுகளில் வழங்கப்பட்ட கூடுதல் நேரச் சலுகையைக் கூட பயன்படுத்தாமல், மற்ற மாணவர்களைப் போலவே தேர்வுகளை எழுதி வருவது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை.....? வெளியான முக்கிய தகவல்!!!

தேர்வு ஏற்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்

ஸ்டேட் வங்கித் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள இருவருக்கும் தனித்தனியாக தேர்வு அறைகளும் இருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உடலமைப்பு காரணமாக இருவரும் ஒரே நேரத்தில் தனித்தனியாக அமர்ந்து வினாத்தாளையும் விடைத்தாளையும் பார்க்க முடியாத சூழல் இருப்பதால், இந்த ஏற்பாடு நடைமுறையில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே தேர்வறை வழங்க கோரிக்கை

இதையடுத்து, SBI Exam நடத்தும் அதிகாரிகள் அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரே தேர்வறையை ஒதுக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் அவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே தேர்வு மையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் முன்னாள் விரிவுரையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு சமூக வலைதளங்களிலும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளியாகும் அறிவிப்பு!