இந்தியா

அட பாவி மனுஷா.. தாலி கட்டிய இளம் மனைவியை ரூ.500க்கு விற்ற கணவன்.! பின்னர் நடந்த கொடூரம்.!

Summary:

அட பாவி மனுஷா.. தாலி கட்டிய இளம் மனைவியை ரூ.500க்கு விற்ற கணவன்.! பின்னர் நடந்த கொடூரம்.!


தாலி கட்டிய மனைவியை ரூ 500க்கு விற்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் 21 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி மதன்லால் கட்வர்சா கூறுகையில், 21 வயதான இளம்பெண் கொடுத்த புகாரில், இரு தினங்களுக்கு முன்பு இரவு 9 மணிக்கு லக்கி ஹோட்டளுக்கு நானும் என் கணவரும் சென்றோம்.

அப்போது அங்கு வந்த நபர் என் கணவரிடம் ரூ 500 கொடுத்தார், இதையடுத்து என்னை அந்த நபருக்கு விற்றுவிட்டார். பின்னர் அவர் என்னை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சீரழித்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளியான சோனு சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை காப்பகத்தில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், இச்சம்பவத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement