மாடர்ன் உடை, மது குடிக்க மறுத்த மனைவி! ஆத்திரம் அடைந்து அதிர்ச்சி செயலில் ஈடுபட கணவன்.

மாடர்ன் உடை, மது குடிக்க மறுத்த மனைவி! ஆத்திரம் அடைந்து அதிர்ச்சி செயலில் ஈடுபட கணவன்.


Husband said triple thalak to wife who refused to wear modern dress

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த நூரி பாத்திமா என்பவர் அதே பகுதியை சேர்ந்த இம்ரான் முஸ்தபா என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் முடிந்த நாளில் இருந்தே தனது மனைவியை மாடர்ன் உடை அணிய கூறியும், இரவு நேர பார்ட்டிகளில் மது அருந்த கூறியும் கணவர் கொடுமைபடுத்தியுள்ளார்.

இதுபோன்று கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் இவர்களுக்குள் இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு முஸ்தபா தனது மனைவி பாத்திமாவிடம் கூறியுள்ளார்.

Crime

இதற்கு பாத்திமா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான முஸ்தபா தனது மனைவிக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையம் சென்ற பாத்திமா தனது கணவர் தனக்கு செய்யும் கொடுமைகள் குறித்தும், கட்டாயப்படுத்தி இரண்டுமுறை கருக்கலைப்பு செய்தாகவும், அவர் கூறுவதை கேட்க மறுத்ததால் தலாக் கூறி விவாகரத்து செய்திருப்பதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளார் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.