"உயிரை பறித்த ரகசியம்..." காதல் மனைவி கொடூர கொலை.!! கணவன் பகீர் வாக்குமூலம்.!!



husband-murders-wife-live-with-her-dead-body-shocking

திருவள்ளூர் மாவட்டத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்த கணவன் அவரை கொலை செய்து அந்தப் பெண்ணின் சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாராம்மாள் என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றிருக்கிறது. இந்நிலையில் தங்களுக்குள் ஒளிவு மறைவு எதுவும் இருக்க வேண்டாம். அதனால் நமக்கிடையே இருக்கும் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளலாம் என கணவர் ஜான்சன் கூறியிருக்கிறார்.

tamilnadu

இதனைக் கேட்ட மனைவி சாராம்மாள், தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும் அந்தக் குழந்தைகள் தனது தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் 2 குழந்தைகளையும் நம்முடன் அழைத்து வந்து பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருக்கிறார். இது ஜான்சனை மிகவும் பாதித்திருக்கிறது. மேலும் இவ்வளவு பெரிய ரகசியத்தை திருமணத்திற்கு முன் நமக்கு கூறாமல் ஏமாற்றி விட்டாரே என தனது மனைவியின் மீது குரூரத்தில் இருந்திருக்கிறார் ஜான்சன்.

இதையும் படிங்க: "அவ சரி இல்ல சார்: அதான் போட்டுட்டேன்.." ஒரு போன் காலில் பதறிய போலீஸ்.!! கடைசியில் ட்விஸ்ட்.!!

இதனைத் தொடர்ந்து மனைவியை அடிப்பது கொடுமைப்படுத்துவது என தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளார். மேலும் மனைவியை வெறுத்து ஒதுக்கியிருக்கிறார் ஜான்சன். மேலும் சம்பவம் நடந்த தினத்தன்று மனைவியின் மீது ஆத்திரமடைந்த ஜான்சன் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை என்ன செய்வதென்று தெரியாமல் சாக்கு மூட்டையில் கட்டி வீட்டில் வைத்திருக்கிறார். மேலும் அந்த சடலத்துடனே 2 நாட்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இறந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் எப்படியும் போலீஸ் நம்மை பிடித்து விடும் என பயந்த ஜான்சன், காவல்துறையிடம் சென்று நடந்த உண்மையை கூறி சரனடைந்திருக்கிறார். அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!