இந்தியா

மனைவியை தீர்த்துக்கட்ட,பாம்பை விலைக்கு வாங்கி கணவன் செய்த செய்த காரியம்! அம்பலமான சினிமாவையும் மிஞ்சிய கொடூரம்!

Summary:

husband killed wife using snake

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் வசித்து வந்தவர் அமிதேஷ் பட்டாரியா. இவரது மனைவி சிவானி. இவர்களுக்கு திருமணமாகி இருகுழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதேஷ் தனது மனைவியை பாம்பு கடித்து விட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் பாம்பு கடித்து இறக்கவில்லை எனவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து உள்ளார் எனவும் தெரியவந்தது.அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் தான்தான் தனது மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். 

அமிதேஷ்  மற்றும் அவரது மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வந்துள்ளது.இதனால் அமிதேஷ் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.மேலும் அதற்காக பாம்பு ஒன்றையும் 11 நாட்களுக்கு முன்பு வாங்கி வீட்டில் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த கொலைகுறித்து அவர் தனது தந்தை மற்றும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அமிதேஷின்  தந்தை மற்றும் சகோதரி வீட்டை விட்டு வெளியேறியநிலையில் அமிதேஷ் தனது மனைவிகின முகத்தில்  தலையணையை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் நான் வாங்கி வைத்திருந்த பாம்பின் பல்லை சிவானியின் கையில் பதிய  வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தனது மனைவியை பாம்பு கடித்துவிட்டதாக அலறி நாடகமாடியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அமிதேஷ்  மற்றும் அவரது தந்தை, சகோதரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


Advertisement