நீ அழகாவே இல்ல.. கர்ப்பிணி மனைவிக்கு கொடூர கணவனால் நேர்ந்த துயரம்.. ஆசிட் ஊற்றி வெறிச்செயல்.!

நீ அழகாவே இல்ல.. கர்ப்பிணி மனைவிக்கு கொடூர கணவனால் நேர்ந்த துயரம்.. ஆசிட் ஊற்றி வெறிச்செயல்.!


husband-killed-his-wife-for-her-not-beautiful

மனைவி அழகாக இல்லை என்று மூன்று மாதகர்ப்பிணி எனக்கூட பாராமல் அவரது வாயில் ஆசிட் ஊற்றி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டம், ராஜ்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தருண். இவருக்கும், கல்யாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணம் சில மாதங்களுக்கு முன் நடந்துள்ளது.

தொடர்ந்து திருமண நாட்களிலிருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுடன் இருந்துள்ளனர். இந்த நிலையில், மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சமயத்தில், தான் திட்டியதால் மனமுடைந்து வீட்டின் கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தருண் தெரிவித்துள்ளார்.

ஆனால், பெண்ணின் பெற்றோருக்கு இது சந்தேகத்தையளிக்க அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், திருமண நாள் முதல் தற்போது வரை தனது மனைவி அழகு இல்லை என்று தினமும் கார்த்திக் தகராறு செய்துவந்தது தெரியவந்தது.

telungana

மேலும், மனைவியை தனக்கு பொருத்தம் இல்லாதவர் என அடிக்கடி அடித்து உதைத்த நிலையில், தனது மனைவி கர்ப்பமானதை பொறுக்கமுடியாமல் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று தனது உறவினர் ஒருவருடன் இணைந்து மனைவியின் வாயில் வலுக்கட்டாயமாக எலி மருந்து மற்றும் ஆசிட் இரண்டையும் ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கல்யாணியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், கொலை செய்த கணவனையும், உடந்தையாக இருந்த உறவினரையும் கைது செய்துள்ளனர். அத்துடன் மூன்று மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவி அழகாக இல்லாததை காரணம் காட்டி ஆசிட் ஊற்றி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.