மனதை கல்லாக்கி கொண்டு மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்..! கணவனிடமே ஆசிர்வாதம் வாங்கிய தம்பதி.!

பீகார் மாநிலத்தில் உத்தம் குமார் என்ற நபருக்கும் சப்னா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சப்னாவுக்கு கணவர் உத்தம் குமாரின் உறவினர் ராஜு குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சப்னா அடிக்கடி காதலனிடம் போன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த இதையறிந்த உத்தம் குமார் மற்றும் குடும்பத்தார் சப்னாவை கண்டித்தனர். ஆனால் ராஜுகுமாரை திருமணம் செய்து கொள்வதில் சப்னா உறுதியாக இருந்தார்.
இதையடுத்து தனத்தை மனதை கல்லாக்கி கொண்டு ராஜுகுமாரை சப்னாவுக்கு திருமணம் செய்து வைக்க உத்தம் குமார் முடிவு செய்தார். அதன்படி கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து வைத்தார். பின்னர் தம்பதிகள் உத்தம் குமார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். அந்த சமயத்தில் தன்னையும் மீறி உத்தம் குமார் கண்களில் இருந்து நீர் வழிந்தது காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.